பிசிஓஎஸ் - பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோமை உணவு மூலம் கட்டுப்படுத்துவது எப்படி?
இன்று பெண்களை பிடித்திருக்கும் ஏழரைச்சனி என்றே இந்த பி சி ஓ எஸ் என்ற பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமை கூறலாம். தமிழில் இதனை பலவுறை அண்ட நோய் என்று அழைப்பார்கள். சுமார் 100 சதவீத பெண்களில் 90 சதவீத பெண்கள் இந்த நோயால் இன்று பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் தாய்மைப்பேறு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய கனவாகவே உள்ளது.
இந்த நோயானது டீன்-ஏஜ் வயது உடைய பெண்கள் முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு வரலாம். இந்த நோய் வருவதற்கு காரணம் என்ன என்று பார்க்கையில் அது மரபுவழியான நோயாகவும் ,மாறுபட்ட பழக்கவழக்கங்கள் ,உணவு முறைகள்,உடல் பருமன் இவற்றின் மூலமும் ஏற்படலாம்.
இந்த நோய்க்கான அறிகுறிகளாக ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் அதிகளவு முடிகள் ,உடல் எடை அதிகரித்தல், முடி உதிர்தல், எண்ணெய் வடியு
இந்த பிசிஓஎஸ் கட்டுப்படுத்தக் கூடிய இயற்கையான உணவுகளை நீங்கள் உங்கள் உணவு சங்கிலியில் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக அவற்றிலிருந்து விடுதலை பெறலாம்.
இந்த உணவு முறையோடு உடல் உழைப்பும் மிகவும் அவசியம் .உடல் உழைப்பு இருந்தால் நிச்சயமாக இந்த நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் குணம் அடையலாம்.
பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்த்து நேரடியாக காய்கறி, பழங்களை பயன்படுத்துவதின் மூலம் தான் 100 சதவீத ஊட்டச்சத்தினை நாம் பெற முடியும். நார்சத்து அதிக அளவு கோதுமை, பச்சை கேரட், கடலை, பட்டாணி, முழு தானியங்கள்,காலிபிளவர்,பின்ஸ்,மொச்சை வகைகள் ஆகியவற்றில் அதிக அளவு உள்ளது. பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய்
போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம். சில பழங்களை தோலோடுஉண்பது தான் மிகச் சிறந்தது. உண்ணும் முன் கழுவி விட்டு உண்ண வேண்டும். இந்த நார்ச்சத்து உணவுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.ஆனால் இதுவே போதுமான கலோரியை நமக்கு தராது.எனவே புரதச்சத்து உணவான கோழி, மீன், முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ,கொட்டைகள் விதைகள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சக்கரை கட்டுப்படுவதோடு உடல் எடை கூடுவதை தவிர்க்கலாம்.
இத்தோடு தொற்றுக்கள் எதிர்க்கும் உணவான தக்காளி, மஞ்சள், வால்நெட் ,கொழுப்புள்ள மீன் பிசி ஓஎஸ் ஐ குறைக்கக்கூடிய தன்மை உள்ளது.மேலும் மூன்று வேளை அம்மியில் அவர்களே அரைத்த மூன்று வகையான கருவேப்பிலை சட்னி,எள் சட்னி, பீட்ரூட் சட்னி இதனை தொடர்ந்து வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் நிச்சயமாக பிசிஓஎஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இவர்கள் காபி, சோயா, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், மாவுச் சத்து மிகுந்துள்ள பொருட்கள் சிவப்பு மாமிசம் ,குறிப்பாக மைதா போன்றவற்றை உணவில் இருந்து அறவே நீக்கி விட வேண்டும்.தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சியோடு நடை பயணமும் மேற்கொள்ளுதல் கூடுதல் சிறப்பு. இந்த முறையை நீங்கள் பின்பற்றி நீங்கள் அடைந்த பலனையும் உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு கூறுங்கள்.
Comments